கோபிநாத்

 
கல்வி

ஸ்டார்ட்-அப் பயணம் பகிரும் கோபிநாத் | நான் முதல்வன் திட்டம்

Sponsored Content

வணக்கம், என் பெயர் கோபிநாத். நான் திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் Textile Technology பாடப்பிரிவில் பயின்றேன். நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாலிப்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். என்னுடைய குடும்பம் ஒரு விவசாய பின்னணியைச் சேர்ந்தது.

குடும்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உடனடியாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் எந்தக் கல்லூரியிலும் சேராமல் இருந்தேன். பிறகு கடன் வாங்கித்தான் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த அந்த நாளில் இருந்து, “நான்கு வருடம் நன்றாக படித்து, ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்” என்ற ஒரே கனவுதான் எனக்குள் இருந்தது.

ஆனால் கல்லூரியில் சேர்ந்ததும், என் வாழ்க்கையின் முதல் பெரிய மாற்றம் நடந்தது. தமிழ்நாடு அரசின் EDIITN Hackathon-இல் நான் பங்கேற்றேன். இந்த hackathon-ல் 50,000-க்கும் மேற்பட்ட குழுக்கள், 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அந்தப் போட்டியில், என் கல்லூரியைச் சேர்ந்த என் குழு ஒவ்வொரு நிலையாக முன்னேறி, தமிழ்நாடு அளவில் ரூபாய் 1,00,000 பரிசு வென்றது.

          

அந்த வெற்றி எனக்குள் ஒரு புதிய கேள்வியை எழுப்பியது - “இங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்வது?” அந்த தேடலின் போதுதான், “நான் முதல்வன்” திட்டத்தின் ‘நிரல் திருவிழா’ பற்றி கேள்விப்பட்டேன். நிரல் திருவிழா 2.0 Hackathon-இல் 15,000-க்கும் மேற்பட்ட மாணவக் குழுக்கள் பங்கேற்றனர். அதிலே நானும் பங்கேற்றேன்.

அந்தப் போட்டியில் முதல் 50 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 2,00,000 மதிப்புள்ள Startup TN Smart Card (அதாவது தமிழ்நாடு அரசு 100-200 முன்னணி நிறுவனங்களுடன் tie-up செய்து, project-க்கு தேவையான பொருட்களை மானியத்தில் வாங்கும் வாய்ப்பு) அதோடு ரூபாய் 1,00,000 ஊக்கத்தொகை எனக்கு வழங்கப்பட்டது.

ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, business என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருந்த எனக்கு, தொழில் முனைவோர் சிந்தனையை கொடுத்தது நான் முதல்வன் - நிரல் திருவிழா தான். Bootcamp-ல் Project-ஐ எப்படி present செய்ய வேண்டும், Project-ஐ எப்படி explain செய்ய வேண்டும், Idea-வை உலகத்துக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும், Speaking skills, pitch desk, design thinking என்று 3-4 நாட்கள் முழுமையான பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டது.

அதோடு, “உன்னுடைய idea-வை வேற யாரும் பயன்படுத்தக்கூடாது என்றால் patent apply பண்ண வேண்டும்” என்று சொல்லி, வெளியில் ரூ. 10,000 - ரூ. 20,000 செலவாகும் patent process-ஐ, நான் முதல்வன் திட்டம் மூலம் முற்றிலும் இலவசமாக செய்து கொடுத்தார்கள்.

இன்று, என் project-க்கு தமிழ்நாடு அரசே patent வாங்கி தந்துள்ளது. அதை இப்போது யாராலும் பயன்படுத்த முடியாது. நான் அதை ஒரு முழுமையான business-ஆக கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் எனக்கு ஒரு தொழிலும் உருவானது. எதுவுமே தெரியாமல், ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு விவசாயப் பையனை, Startup நிறுவனம் தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்தது “நான் முதல்வன்” திட்டம் தான்.

என்னை ஒரு “நிரல் திருவிழா Entrepreneur”-ஆக மாற்றியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியதுபோல, இன்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மற்ற மாநிலங்களும், மற்ற நாடுகளும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் - மூன்றிலும் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணம் “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள். இந்தத் திட்டங்களால் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப இளைஞர்களின் கனவுகளும், வாழ்க்கையும் மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்வில் ஒளியை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் “நான் முதல்வன்” திட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனக்கு மட்டும் இல்லைஞ் என்னைப் போல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாழ்க்கையே மாற்றிய திட்டம் - “நான் முதல்வன்.”.

வெற்றி நிச்சயம் திட்டம்:

வணக்கம், என் பெயர் ஜெயஸ்ரீ. நான் நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு முடித்த பிறகு நீண்ட நாட்களாக .வேலை கிடைக்காமல் தேடி அலைந்தேன். எவ்வளவு முயன்றும் எனக்கு ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனதளவில் மிகவும் உடைந்துபோனேன்.

அதனால் ஒரு வருடம் போட்டித் தேர்வுகளுக்கு படித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. என் ஆசிரியர் ஒருவர், "வெற்றி நிச்சயம்” என்ற திட்டத்தைப் பற்றி எனக்குத் தெரிவித்தார். அந்தத் திட்டம் என் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் என்று அப்போது நான் நினைக்கவே இல்லை.

ஜெயஸ்ரீ

வெற்றி நிச்சயம் திட்டம் பற்றி அறிந்து, TVS Training Centre-ல் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு நான் CNC Turning Operator course-ஐ தேர்வு செய்து பயிற்சி பெற்றேன். பயிற்சி மிகச் சிறப்பாக, நடைமுறை அனுபவத்துடன் அளிக்கப்பட்டது. CNC மட்டும் அல்லாமல் CNC Milling, Lathe, Electric Vehicle போன்ற பல்வேறு course-களும் அங்கே கிடைக்கின்றன.

இந்த பயிற்சியின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், financial stable இல்லாத மாணவர்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரி dropout ஆனவர்களுக்கு, வேலை தேடி திசை தெரியாமல் நிற்கும் இளைஞர்களுக்கு, அனைத்து course-களும் கட்டணம் இல்லாமல், இலவசமாக தமிழ்நாடு அரசு “வெற்றி நிச்சயம்” திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

பயிற்சியின்போது உணவு, தங்குமிடம், தரமான பயிற்சி - அனைத்தும் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்பட்டது. பயிற்சியின் போதே .stவீஜீமீஸீபீம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், பயிற்சி முடித்த உடனே இதே நிறுவனத்தில் (TVSல்) வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஒரு காலத்தில் வேலை இல்லாமல் நம்பிக்கை இழந்த நான், இன்று பயிற்சியும், வேலையும் பெற்று ஒரு தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணியாக மாறியிருக்கிறேன்.

என் வாழ்க்கையையே மாற்றிய இந்த வாய்ப்பை எனக்கு அளித்தது “வெற்றி நிச்சயம்” திட்டமே. உண்மையிலேயே, பயிற்சியும் கொடுத்து, வேலையும் கொடுத்து, என் எதிர்காலத்திற்கே வழிகாட்டிய திட்டம் இது. இதனால் இன்று எனக்கும் வாழ்க்கையில் - “வெற்றி நிச்சயம்!” இந்த அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், வெற்றி நிச்சயம் திட்டத்திற்கும் TVS Training Centre-க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

SCROLL FOR NEXT