கல்வி

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புக்கு விண்ணப்பம்: சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2026-27-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், மறறும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) வழங்கப்படும் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 18 முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள முகவரி: www.tndalu.ac.in ஆகும். மேலும் 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதிகள் தொடர்பான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT