பாணாவரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மொழி ஆய்வகத்தில் ஆங்கில மொழி பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.

 
கல்வி

ஆங்கிலம் கற்க ஆய்வகம்: அசத்தும் ராணிப்பேட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்

ப.தாமோதரன்

ராணிப்பேட்டை: ஆங்​கில மொழியைப் பேசுவதற்கு அரசுப் பள்ளி மாண​வர்​களிடம் இருந்துவந்த தயக்​கங்களை மாற்​றும் முயற்​சி​யாக ராணிப்​பேட்டை மாவட்​டத்​தில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் ‘மொழிகள் ஆய்​வகம்’ திட்​டம் தற்​ போது புத்​து​யிர் பெற்றுள்ளது. ராணிப்​பேட்டை மாவட்​டத்​தில் 120 அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​கள் உள்​ளன. இந்த பள்​ளி​களில் 6, 7, 8 -ம் வகுப்​பு​களைச் சேர்ந்த 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் உள்​ளனர். பள்​ளி​களில் உள்ள உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களில் ‘மொழி ஆய்​வகம்’ என்ற சிறப்​புத் திட்​டம் செயல்படுத்​தப்​பட்டு வரு​கிறது.

மாண​வர்​கள் ஆங்​கிலத்தை ஒரு பாட​மாக மட்​டும் பார்க்​காமல், அன்​றாட வாழ்க்​கை​யில் பயன்​படுத்​தக்​கூடிய மொழி​யாகக் கற்றுக்​கொள்ள வேண்​டும் என்​பதே இத்​திட்​டத்​தின் முக்​கிய நோக்க​மாக உள்​ளது. குறிப்​பாக ஆங்​கிலத்தை அச்​சமின்றி பேசுதல், கேட்​டுப் புரிந்​து​கொள்​ளுதல், புதிய சொற்​களை அறிந்து பயன்​படுத்​துதல், வாக்​கி​யங்​களை அமைத்​துப் பேசுதல் உள்​ளிட்ட பல்​வேறு மொழித்​திறன்​களை வளர்க்​கும் வகை​யில் பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன. இதற்​காக மாண​வர்​களுக்கு ஆங்​கில ஆசிரியரின் வழி​காட்​டு​தலுடன் மட்​டுமின்​றி, இணை​யதளத்​தின் வாயி​லாக தாங்​களாகவே பயிற்சி மேற்​கொள்​ளும் வகை​யில் கற்றல்​-கற்​பித்​தல் முறை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

கணினி மற்​றும் உயர் தொழில்​நுட்ப வசதி​களைப் பயன்​படுத்தி மாண​வர்​கள் ஆங்​கில வார்த்​தைகள் மற்​றும் வாக்​கி​யங்​களைக் கேட்​டு, அவற்றை உச்​சரித்​து, மீண்​டும் மீண்​டும் பயிற்சி செய்ய முடிகிறது. இதன் மூலம் வகுப்​பறை​யில் பேசத் தயங்​கும் மாண​வர்​களுக்​கும் தங்​களது திறனை வெளிப்​படுத்​து​வதற்​கான வாய்ப்பு கிடைக்​கிறது. தொடர் மீளாய்​வுக் கூட்​டங்​களின் விளை​வாக, 2026-27 ஆம் கல்​வி​யாண்​டில் இத்​திட்​டத்​தின் செயல்​பாடு​கள் மேலும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு வார​மும் வெள்​ளிக்​கிழமையன்று ஒரு ஆங்​கில வகுப்​பு, மொழிகள் ஆய்​வகப் பயிற்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 6, 7 மற்​றும் 8-ம் வகுப்பு மாண​வர்​கள் இந்த வகுப்​பு​களில் பங்​கேற்று ஆங்​கிலத்​தைக் கற்​றுக்​கொள்​வதுடன், சக மாண​வர்​களு​டன் இணைந்து உரை​யாடல் மற்​றும் பயிற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர்.

வழக்​க​மான வகுப்​பறை​யில் ஆசிரியர் கூறு​வதைக் கேட்டு எழுதும் முறைக்கு மாறாக, மொழி ஆய்​வகத்​தில் மாண​வர்​களே செயல்​பட்​டுக் கற்​றுக்​கொள்​ளும் வாய்ப்பு கிடைக்​கிறது. இதனால் ஆங்​கிலத்​தில் தவறு செய்து விடு​வோமோ என்ற அச்​சம் படிப்​படி​யாகக் குறைந்து ஆங்​கிலத்​தில் உரை​யாடும் திறன் மேம்​பட்டு வரு​கிறது. ஆசிரியர்​களும் இத்​திட்​டத்தை ஆர்​வத்​துடன் வரவேற்​றுச் செயல்​படுத்தி வரு​கின்​ற​னர். ஒவ்​வொரு மாண​வரின் மொழித்​திற​னை​யும் கவனித்​து, அவர்​களுக்​குத் தேவை​யான பயிற்​சிகளை வழங்​கு​வதுடன், ஆங்​கிலத்​தில் பேசுவதற்​கான சூழலை​யும் உரு​வாக்கி வரு​கின்​ற​னர். குறிப்​பாக, ஆங்​கிலத்​தில் பேசுவதற்​குத் தயங்​கும் மாண​வர்​களை ஊக்​கப்​படுத்​தி, அவர்​களும் மற்ற மாண​வர்​களுக்கு இணை​யாக உரை​யாடும் வகை​யில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

இதன் காரண​மாக மாண​வர்​களிடையே ஆங்​கிலத்​தைக் கற்​றுக்​கொள்​வ​தில் ஆர்​வம் அதி​கரித்து வரு​கிறது. பாடப்​புத்​தகத்​தில் உள்ள ஆங்​கிலத்​தைப் படிப்​ப​தோடு நின்​று​வி​டா​மல், தங்​களது எண்​ணங்​களை ஆங்​கிலத்​தில் வெளிப்​படுத்த வேண்​டும் என்ற ஆர்​வ​மும் உரு​வாகி​யுள்​ளது. சக மாண​வர்​களு​டன் ஆங்​கிலத்​தில் உரை​யாடும்​போது ஏற்​படும் மகிழ்ச்​சி​யும், தங்​களால் ஆங்கிலத்தில் பேச முடிகிறது என்ற தன்​னம்​பிக்​கை​யும் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்​படுத்தி வரு​கிறது.

அரசுப் பள்ளி மாண​வர்​களின் கல்வி வளர்ச்​சி​யில் மொழித்​திறன் முக்​கிய பங்கு வகிக்​கும் நிலை​யில், ‘மொழி ஆய்​வகம்’ போன்ற திட்​டங்​கள் அவர்​களின் எதிர்​காலத்​துக்​கும் பயனுள்​ள​தாக அமைந்​துள்​ளது. ஆங்​கிலத்​தில் அச்​சமின்றி பேசும் திறன், சுயமாகக் கற்​றுக்​கொள்​ளும் பழக்​கம், பிறருடன் இணைந்து செயல்​படும் திறன் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து வளர்க்​கும் இந்த முயற்​சி, ராணிப்​பேட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மொழித்​திற​னில்​ குறிப்​பிடத்​தக்​க மாற்​றத்​தை ஏற்​படுத்​தும்​ முயற்சி​யாக அமைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT