யோகேஸ்வரி

 
கல்வி

சாத்தூர் டு ஐஐடி: வெற்றிப் பயணக் கதை பகிரும் யோகேஸ்வரி | நான் முதல்வன் திட்டம்

Sponsored Content

என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி படந்தால் ஊரைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா தேநீர் கடையில் வேலை பார்க்கிறார்; அம்மா பட்டாசு தொழிலாளி. நான் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்திருந்தாலும், என் கனவுகளுக்கு முன்னால் எந்தத் தடை நிற்கக்கூடாது என்ற நம்பிக்கை எப்போதும் இருந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, “அடுத்து நான் என்ன படிப்பேன்? எங்கே போவேன்? எப்படிப் போவேன்?” என்ற கேள்விகள் மனதை நாள்தோறும் துளைத்துக்கொண்டிருந்தன.

அப்போது தான் நான் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உள்ள ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியைப் பற்றி அறிந்தேன். அந்த நிகழ்ச்சி எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்களால் மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் கலந்து கொண்ட அந்த ஒரு நிகழ்ச்சி, என் வாழ்க்கையை முழுவதும் மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

அங்கே உயர்கல்வி பற்றி, எத்தனை வாய்ப்புகள் இருக்கிறது, எந்த நுழைவுத் தேர்வு எழுதலாம், என்ன படிக்கலாம் என்று மிகவும் தெளிவாக சொன்னார்கள். வழிகாட்டியாக மட்டுமல்ல - அவர்கள் எனக்காகவே JEE Main தேர்விற்கு பதிவு செய்து கொடுத்தார்கள்.

பதிவு செய்த பிறகும் “எப்படி படிக்க வேண்டும், எப்படி தயாராக வேண்டும்” என்று சிறப்பு பயிற்சியும் அளித்தார்கள். அந்த பயிற்சியும் வழிகாட்டுதலும் தான் இன்று என்னை IIT Bombay Aerospace Engineering வரை, நான் கனவில் கூட நினைக்காத உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

இது என் சாதனை மட்டுமல்ல... என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்று நம்பிக்கை கொடுத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி. இந்த திட்டத்தை உருவாக்கி, எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

இன்றைக்கு நான் IIT Bombay-™ Aerospace Engineering படிக்கிறேன் என்பதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது. நான் மட்டும் அல்ல... என் அப்பா, அம்மா, எங்கள் முழு குடும்பத்திற்கும் இது ஒரு பெருமையான தருணம். ‘நான் முதல்வன்’ எனக்கு கல்வி வசதி மட்டும் தரவில்லை; அது எனக்கு தைரியம், நம்பிக்கை, எதிர்காலம் என மூன்றையும் கொடுத்தது.”

வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் நந்தினி. நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். என் தந்தை கூலித்தொழிலாளி. என் கணவர் கார்த்திக், இவர் மாற்றுத் திறனாளி. நானும் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளி.

நாங்கள் திருவள்ளூர் மாவட்டம், ஏர்ணாவாக்கம் ஊரில் வசித்து வருகிறோம். என் உடல் நிலை காரணமாக, படிப்பை முடித்த பிறகு நீண்ட காலம் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டேன். குடும்ப நிலைமைக்கும் பெரிய சவால்கள் இருந்தன.

நந்தினி

அந்த நேரத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தும் “வெற்றி நிச்சயம் திட்டம்” எனக்கு புதிய திசை காட்டியது. இந்த திட்டத்தின் மூலம், நான் ZF Commercial Vehicle Control Systems நிறுவனத்தில் தொழில்துறை திறன் பயிற்சி (Industrial Skill Training) பெறும் வாய்ப்பு பெற்றேன். அங்கு Production Operator பணிக்கான திறன்களை கற்றுக்கொண்டேன்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், அதே நிறுவனத்தில் எனக்கு மாதம் ரூ.18,000 சம்பளத்துடன் உணவுவசதியுடன் கூடிய வேலை கிடைத்தது.

இந்த வேலை வாய்ப்பு எனக்கு மட்டுமல்ல, என் குடும்பத்திற்கும் உறுதியான நிலைத்தன்மையை வழங்கியுள்ளது. ஒரு மாற்றுத் திறனாளியாக, நான் எனக்கான இடத்தை இந்த சமூகத்தில் உருவாக்கிக் கொண்டுள்ளேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தை சாத்தியமாக்கிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

SCROLL FOR NEXT