கோப்புப் படம்

 
கல்வி

தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு ஹால் ​டிக்கெட்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​களில் நேர்​முகத்​தேர்வு அல்​லாத பதவி​களுக்​கான கணினிவழி தேர்வு மற்​றும் விரி​வாக எழுதும் தேர்வு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை, தொடர்ந்து செப்​டம்​பர் 7 முதல் 12 வரை மற்​றும் 19-ம்தேதி நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்ட விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. விண்​ணப்​ப​தா​ரர்​கள் தங்​களின் ஒரு​முறை பதிவுதளத்​தின் மூல​மாக விண்​ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்​பிட்டு ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இத்​தேர்​வு, உதவி பொறி​யாளர், வேளாண் விரி​வாக்க அலு​வலர், மருந்து ஆய்​வாளர், தோட்​டக்​கலை அலு​வலர், தொல்​லியல் அலு​வலர் ஜூனியர் போட்​டோகி​ராபர் உள்பட 45 வித​மான பதவி​களில் 508 காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்காக நடத்​தப்​படு​கிறது.

SCROLL FOR NEXT