கல்வி

பிப்.8-ல் நடைபெற உள்ள நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழு​வதும் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் (நிப்ட்) இளநிலை, முது​நிலை, பிஎச்டி படிப்​பு​களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகை​யில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு வரும் 8-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​வுக்கான ஹால் டிக்​கெட்​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. மாணவர்​கள் தங்​கள் ஹால் டிக்​கெட்டை https://exams.nta.nic.in/niftee என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். கூடு​தல் விவரங்​களை http://www.nta.ac.in எனும் தளத்​தில் அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது nift@nta.ac.in எனும் மின்​னஞ்​சலை மாணவர்​கள் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT