கல்வி

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அகில இந்​திய தொழில்​நுட்​பக்​கல்வி குழு​மத்​தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் மேலாண்மை படிப்​பு​களில் சேர சிமேட் எனும் பொது நிர்​வாக நுழைவுத் தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.

தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் இந்த தேர்வு ஆண்​டு​தோறும் கணினி வழி​யில் நடத்​தப்​பட்டு வரு​கின்றன. அதன்​படி, நடப்​பாண்​டுக்​கான சிமேட் தேர்வு நாளை மறு​தினம் (25-ம் தேதி) நடை​பெறுகிறது.

          

இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதி​வானது கடந்த அக். 17-ல் தொடங்கி நவ. 25-ம் தேதி முடிவடைந்​தது. இத்​தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட்​டு​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அவற்றை https://cmat.nta.nic.in/ எனும் வலைத்​தளத்​தில் சென்று தேர்​வர்​கள் பதி​விறக்​கம் செய்​து கொள்​ளலாம்.

இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in எனும் இணை​யதளத்​தில் இருந்து அறிய​லாம். ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்​லது cmat@nta.ac.in மின்​னஞ்​சல் வாயி​லாக தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT