கோப்புப் படம்

 
கல்வி

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்​ளி​கள் இயக்​குநர் சுகன்யா அனைத்து மாவட்ட கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​பவ​தாவது: அரசு பொது விடு​முறை நாட்​கள் மற்​றும் அரசால் அறி​விக்​கப்​படும் விடு​முறை நாட்​களில் மாணவர்​களுக்கு எவ்​வித வகுப்​பு​களும், சிறப்பு வகுப்​பு​களும் நேரடி​யாகவோ அல்​லது ஆன்​லைன் மூலமாகவோ நடத்​தக்​கூடாது என ஏற்​கெனவே அறி​வுரை வழங்​கப்​பட்​டுள்​ளது.

மீறி செயல்​படும் பள்​ளி​கள் மீது தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் ஒழுங்​குபடுத்​து​தல் விதி​கள் 2023-ன்படி உரிய நட​வடிக்கை எடுக்​கப்​படும். எனவே, அனைத்து மாவட்ட கல்வி அதி​காரி​களும் (தனியார் பள்​ளி​கள்) உரிய கவனம் செலுத்தி அனைத்து பள்​ளி​களின் நிர்​வாகத்​தினருக்​கும் உரிய அறி​வுரை வழங்க வேண்​டு்ம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT