கல்வி

அரசு திரைப்படக் கல்லூரி படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு திரைப்​படக் கல்​லூரி​யில் டிஜிட்​டல் இன்டர்மீடியட், ஆடியோகி​ராபி ஆகிய இரு படிப்​பு​களுக்கு மட்​டும் ஆன்லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது:

தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறு​வனம் சென்னை தரமணி​யில் இயங்கி வரு​கிறது. இந்​நிறு​வனத்​தில் ஒளிப்​ப​திவு, டிஜிட்​டல் இன்டர்​மீடியட், ஒலிப்​ப​திவு, இயக்​கம் மற்​றும் திரைக்​கதை எழுதுதல், எடிட்​டிங், அனிமேஷன் மற்​றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்​களில் இளங்​கலை பட்​டப்​படிப்பு (பேச்​சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்​ஸ்) வழங்​கப்​படு​கிறது.

நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 21-ம் தேதி முடிவடைந்​தது. இந்​நிலை​யில், டிஜிட்​டல் இன்​டர்​மீடியட், ஒலிப்​ப​திவு (ஆடியோகி​ராபி) ஆகிய இரண்டு பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் நிர்​வாக காரணங்​களுக்​காக, ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

எனவே, மேற்​கண்ட பாடப்​பிரிவு​களில் சேர விரும்​பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக்​கொள்​ளு​மாறு கேட்டுக்​கொள்ளப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT