கோப்புப் படம்
சென்னை: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து சென்னையில் ஆகஸ்ட் 22 முதல் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளன.
வகுப்புகள் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகே அக்ரஹாரம் சந்தில் அமைந்துள்ள அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெறும்.
வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறமையான பயிற்சியாளர்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில், ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய வகுப்பினரும் கலந்துகொள்ளலாம்.
இங்கு பயிற்சி பெற்றவர்களில் 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மத்திய-மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் 95665 23556, 90427 27276, 79045 22336, 94446 41712 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.