கல்வி

கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

சவீதா பொறியியல் கல்லூரி வழங்கும் உயர்வுக்கு உயர்கல்வி

செய்திப்பிரிவு

சென்னை: பொறி​யியல் கல்​லூரி பொதுக் கலந்​தாய்​வில் பங்​கேற்​பவர்​கள் கவனத்​தில் வைத்​திருக்க வேண்​டிய விஷ​யங்​கள் குறித்து கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​துள்​ளார்.

அரசு மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரிகளில் சேர்வதற்​கான பொதுப் பிரிவு மற்​றும் சிறப்பு இட ஒதுக்​கீட்​டுக்​கான கலந்​தாய்வு ஜூலை 15-ம் தேதி முடிந்​துள்​ளது. ஜூலை 20 முதல் பொது கலந்​தாய்வு நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் மாணவர்​கள், பெற்​றோரின் பல்​வேறு சந்​தேகங்​களுக்கு கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​தார். அதன் விவரம் வரு​மாறு:

கலந்​தாய்வு 3 கட்​ட​ங்களாக நடை​பெறுகிறது. முதல் கட்​டத்​தில் 171.33 கட்​ஆஃப் மதிப்பெண் இருப்​பவர்​களுக்கு நடை​பெற்​றது. இதற்கு கீழ் கட்​ஆஃப் உள்​ளவர்​களுக்கு 2 மற்றும் 3-ம் கட்​டங்​களில் கலந்​தாய்வு நடை​பெறும். ஆன்​லைன் கலந்​தாய்வு என்​ப​தால் மாணவர் அவர்​களின் இடத்​திலிருந்தே பிடித்த கல்​லூரி, பிடித்த துறையை தேர்வு செய்​ய​லாம்.

மாணவர்​கள் தங்​களின் கட்​ஆஃப் அடிப்​படை​யில் எந்தக் கல்​லூரி​யில், எந்த துறையை தேர்வு செய்ய வேண்​டும் என அறிந்து தேர்வு செய்​வது நல்​லது.

எனது முதல் விருப்​பம் இது, அது இல்​லை​யென்​றால் இந்த பிரி​வில் இந்தக் கல்​லூரி​யில் இடம் ஒதுக்​குங்​கள் என்று ஒரு மாணவர் எத்​தனை விருப்​பத்தை வேண்​டு​மா​னாலும் தெரிவிக்​கலாம்.

படித்து முடித்த பிறகு வேலை​வாய்ப்பு பற்​றி​யும் அப்​போது தெளி​வாக சிந்​திப்​பது முக்​கி​யம். இந்​தத் துறையை தேர்வு செய்து படித்​தால்​தான் நல்​லது, இந்த கல்​லூரி​தான் சிறந்​தது என்று யாராலும் கணித்து கூற முடி​யாது. எந்த துறை​யில் சேர்ந்து படித்​தா​லும் நன்​றாக புரிந்து படித்​தால் சிறப்​பான எதிர்​காலம் உள்​ளது என்​பது மாணவர்​கள் அறிந்​து​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அஸ்​வின் கூறி​னார்​.

SCROLL FOR NEXT