சென்னை: தமிழக அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் 15 இளங்கலை பட்டப்படிப்புகள், 154 முதுகலை படிப்புகள் மற்றும் 48 டிப்ளமாமற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு அக்.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே பாடத்திட்ட விவரங்கள், கட்டணம், சேர்க்கைநடைமுறைகள் தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) விரிவாக அறிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர். செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.