சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு (லேட்ரல் என்ட்ரி) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் ஆன்லைனில் (www.tnlea.com) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.