சென்னை: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் 2026-27-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு, நேரடி 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதிநேர டிப்ளமா படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 31-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேரடி சேர்க்கையை பொறுத்தவரையில் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் தாங்கள் சேர விரும்பும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்கு உடனடியாக சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.