கோப்புப்படம்

 
கல்வி

பாலிடெக்னிக் 2-ம் ஆண்டில் நேரடி மாணவர் சேர்க்கை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் எஸ்​.​வி​சாகன் வெளியிட்ட அறி​விப்​பில் கூறி​யுள்​ள​தாவது:

அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் நேரடி​யாக 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்​ரி) சேரு​வதற்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்கப்படுகின்​றன. பிளஸ் 2 முடித்த மாணவர்​கள் விண்ணப்பிக்​கலாம். இதற்கு பதிவுக் கட்​ட​ணம் ரூ.150. எஸ்​சி, எஸ்டி மாணவர்​கள் கட்​ட​ணம் செலுத்த தேவை​யில்​லை.

தகு​தி​யுள்ள மாணவர்​கள் www.tnpoly.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 25-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பத்​துடன் மாணவரின் புகைப்​படம், பிளஸ் 2 மதிப்​பெண் சான்​றிதழ் அல்​லது ஐடிஐ மதிப்​பெண் சான்​றிதழ், சாதிச் சான்​றிதழ் ஆகியவற்றைபதிவேற்​றம் செய்ய வேண்​டும். கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட இணை​யதளத்​தில் விரி​வாக அறிந்து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT