கல்வி

பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பிளாஸ்டிக் டெக்​னாலஜி தொடர்​பாக டிப்​ளமா படிப்​பு​களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடை​பெற்று வரு​வ​தாக மத்​திய அரசின் சிப்​பெட் கல்வி நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

மத்​திய பெட்ரோ கெமிக்​கல்ஸ் இன்​ஜினியரிங் அண்ட் டெக்​னாலஜி (சிப்​பெட்) கல்வி நிறு​வனம் சென்னை கிண்டி ஈக்​காட்​டுத்​தாங்​கல் திரு.​வி.க. தொழிற்​பேட்​டை​யில் இயங்கி வரு​கிறது..

இந்த நிறு​வனம், பிளாஸ்​டிக் மோல்ட் இன்​ஜினியரிங் டிப்​ள​மா, பிளாஸ்​டிக் டெக்​னாலஜி டிப்​ள​மா, பிளாஸ்​டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்​ளமா படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.

3 ஆண்டு கால டிப்​ளமா படிப்​பில் எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி பெற்​றவர்​களும் ஒன்​றரை ஆண்டு கால முதுகலை டிப்​ளமா படிப்​பில் பொறி​யியலில் டிப்​ளமோ (மெக்​கானிக்​கல், பிளாஸ்​டிக் டெக்​னாலஜி, மெக்​கட்​ரானிக்​ஸ், ஆட்​டோமொபைல் இன்​ஜினியரிங்) முடித்​தவர்​களும் சேரலாம்.

மேற்​கண்ட டிப்​ளமா படிப்​பு​களு​டன் லேட்​ரல் என்ட்ரி முறை​யில் பிளாஸ்​டிக்ஸ் மோல்டு டெக்​னாலஜி டிப்​ள​மா, பிளாஸ்​டிக்ஸ் டெக்​னாலஜி டிப்​ளமா படிப்​பு​களை​யும் வழங்கி வரு​கிறது.

இரண்டு ஆண்டு கால இந்த படிப்​பு​களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றவர்​களும் (இயற்​பியல் வேதி​யியல், கணிதம் பாடங்​கள் படித்​தவர்​கள்) எஸ்​எஸ்​எல்​சி-யைத் தொடர்ந்து 2 ஆண்டு கால ஐடிஐ படிப்​பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்​ஸ்​மேன், மெக்​கானிக்​கல், ஃபிட்​டிங், பிளாஸ்​டிக், பாலிமர், கெமிக்​கல் டெக்​னாலஜி உள்​ளிட்ட பாடப்​பிரிவு​கள் படித்​தவர்​களும் சேர தகு​தி​யுடைய​வர் ஆவர்.

தற்​போது மேலே குறிப்​பிடப்​பட்ட டிப்​ளமா மற்​றும் முது​நிலை டிப்​ளமா படிப்​பு​களுக்​கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடை​பெற்று வரு​கிறது.

இந்த படிப்​பு​களில் சேர விரும்​பும் மாணவர்​கள் தேவை​யான கல்​விச்​சான்​றிதழ்​களு​டன் சிப்​பெட் நிறு​வனத்​துக்கு நேரடி​யாகச் சென்று உடனடி​யாக சேர்க்கை பெறலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 94449-19183, 9363866518 ஆகிய மொபைல் எண்​களில் தொடர்பு கொள்​ளலாம் என சிப்​பெட் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT