கல்வி

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 31,510 பேருக்கு 2017-23 காலகட்டத்தில் தாமதமாக கல்வி உதவித்தொகை

இந்திய தணிக்கை தலைவர் அறிக்கையில் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ‘கடந்த 2017-23 கால​கட்​டத்​தில் 31,510 எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு கால​தாமத​மாக கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது’ என இந்​திய தணிக்கை தலை​வரின் அறிக்​கை​யில் குற்​றம்​ சாட்​டப்​பட்​டுள்​ளது.

எஸ்​சி, எஸ்​டி, எஸ்​சி-மதம் மாறிய கிறிஸ்தவ மாண​வர்​களுக்​கான கல்வி உதவித்​தொகை திட்​டங்கள் தொடர்​பாக, இந்​திய தணிக்கை தலை​வரின் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களின் கல்​வியறிவு விகிதத்​தை​யும் கல்​வித்​தரத்​தை​யும் உயர்த்​தும் நோக்​கில் அவர்​களுக்கு மத்​தி​ய-​மாநில அரசு சார்​பில் பல்​வேறு கல்வி உதவித்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

இதுகுறித்து போதிய விழிப்​புணர்வு இல்​லாத​தால் 2019-20 கால​கட்டத்​தில் குறிப்​பிட்ட 8 மாவட்​டங்​களில் எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்​கான ப்ரீ-மெட்​ரிக், போஸ்ட்​-மெட்​ரிக் கல்வி உதவித்​தொகை திட்​டங்​கள் சராசரி​யாக 46 சதவீதம் மற்​றும் 39 சதவீத பள்​ளி​களைச் சென்​றடைய​வில்​லை.

கடந்த 2017-23 கால​கட்​டத்​தில் குறிப்​பிட்ட கல்வி நிறு​வனங்​களில் 36,510 எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு ரூ.7.28 கோடி கல்வி உதவித்​தொகை ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை கால​தாமத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதே கால​கட்​டத்​தில் வங்​கிக்​கணக்கு முடக்​கம், பரி​வர்த்​தனை நிறுத்​தம், வங்​கிக்​கணக்கு இல்லை போன்ற காரணங்​களால் 3,530 பேருக்கு ரூ.161 கோடி கல்வி உதவித்​தொகை வங்​கிக்​கணக்​கு​களில் செலுத்​தப்பட முடி​யாமல் திருப்பி அனுப்​பப்​பட்​டது.

அதே​போல், 2023-25-ம் ஆண்​டுகளில் மத்​திய கல்வி உதவித்​தொகை பெற தகு​தி​யில்​லாத எஸ்சி மதம் மாறிய கிறிஸ்தவ மாண​வர்​கள் 2,576 பேருக்கு மத்​திய அரசின்பங்​கான 60 சதவீத உதவித்​தொகை வழங்​கப்​பட்​ட​தால் ரூ.3.64 கோடி தவறாக செலுத்த நேரிட்​டது.

தணிக்கை குழு பரிந்​துரைகள்

எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு கல்வி உதவித்​தொகையை அனு​ம​திக்​கும் முன், கல்வி நிறு​வனங்​களில் நிர்​வாக ஒதுக்​கீட்​டின் கீழ் மாண​வர் சேர்க்கை வெளிப்​படைத் தன்​மை​யுடன் மேற்​கொள்​ளப்​படு​வதை அரசு உறுதி செய்யவேண்​டும்.

தகு​தி​யுள்ள மாண​வர்​களுக்கு மட்​டுமே கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படு​வதை உறு​திப்​படுத்த அவர்​களின் விண்​ணப்​பங்​களை அரசு ஆராய வேண்​டும். கல்வி உதவித்​தொகை அந்​தந்த கல்வி ஆண்​டிலேயே வழங்​கப்பட வேண்டும்.

பலவீன​மான நிதி கட்​டமைப்பு

2024-2025-ம் ஆண்​டில் மாநிலத்​தின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி வளர்ச்சி முந்​தைய ஆண்​டில் பதி​வான 13.34 சதவீதத்​தி​லிருந்து 15.98 சதவீத​மாக உயர்ந்​தது. மாநில பொருளா​தா​ரம் வலு​வான வளர்ச்​சியை பதிவு செய்​தது.

தனி​நபர் வரு​மானத்​தில் மாநிலம் தொடர்ந்து தேசிய சராசரியை​விட சிறப்​பாக இருந்​தது. இது மாநிலம் ஒரு வலு​வான பொருளா​தா​ரத்தை கொண்​டிருப்​பதை குறிக்​கிறது.

இந்த சாதக​மான பொருளா​தார சூழல் இருந்​த​போ​தி​லும் மாநிலத்​தின் நிதி​நிலைமை அழுத்​தத்​தில் இருந்​தது. 2022-23 முதல் 2024-25 வரையி​லான 3 ஆண்​டு​களில் வரி அல்​லாத வரு​வாய் 29.72 சதவீதம் அதி​கரித்​தது.

மத்​திய அரசிட​மிருந்து கிடைக்​கும் மானி​யம் 34.86 சதவீதம் குறைந்​த​போ​தி​லும் மத்​திய வரி​களில் மாநிலங்​களின் பங்கு அதி​கரிப்​பு, சொந்த வரி வரு​வா​யில் ஏற்​பட்ட 7.74 சதவீத வளர்ச்சி ஆகிய​வற்​றால் வரு​வாய் வரவு​களில் ஏற்​பட்ட தாக்​கம் ஓரளவு தணிக்​கப்​பட்​டது.

மாநிலத்தின் நிதி நிலை, வலு​வான பொருளா​தார வளர்ச்​சி​யுடன் தொடர்ச்​சி​யான நிதி நெருக்​கடி​யும் நிலவும் ஒரு முரண்​பாட்டை பிரதிபலித்​தது. பற்​றாக்​குறை அளவு​களும், கடன் விகிதங்​களும் நிர்​ணயிக்​கப்​பட்ட வரம்​பு​களுக்​குள் இருந்​தா​லும் அடிப்​படை நிதிக்​கட்​டமைப்பு பலவீன​மாக இருந்​தது.

வரிப்​பணம் வீணடிப்பு

தமி​ழ​கத்​தில் 12 நகரங்​களை ‘சீர்​மிகு நகரங்​களாக’ (ஸ்​மார்ட் சிட்​டி) மேம்​படுத்த திட்​ட​மிட்ட நிலை​யில், முன்​மொழிவு குளறு​படி​யால் திண்​டுக்​கல் நிராகரிக்​கப்​பட்டு 11 நகரங்​கள் மட்​டுமே தேர்​வாகின.

இந்த நகரங்​களில் ஈட்​டப்​பட்ட ரூ.57.72 கோடி வரு​வாய், திட்​டச் செயல்​பாட்டு அமைப்​பு​களுக்கு வழங்​கப்​ப​டா​மல் உள்​ளாட்சி அமைப்​பு​களாலேயே பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பொது-தனி​யார் பங்​களிப்​பில் ரூ.1,630 கோடிக்கு திட்​ட​மிடப்​பட்​ட​தில், வெறும் ரூ.16.57 கோடியி​லான 4 பணி​கள் மட்​டுமே நடந்​துள்​ளன. மேலும், ரூ.1,602 கோடிக்​கான 52 திட்​டங்​கள்​ செயல்​படுத்​தாமல்​ கைவிடப்​பட்​டுள்​ளன.

மின்வாரியத்துக்கு ரூ.9500 கோடி இழப்பு

நிலக்கரி கொள்முதல் செய்ததில் குளறுபடி, திட்டங்களை நிறைவேற்றுதில் காலதாமதம் காரணமாக மின்வாரியத்துக்கு ரு.9500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT