கல்வி

க்யூட் நுழைவுத் தேர்வு: ஜன.14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழு​வதும் மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்​டும். இதன்படி அடுத்த கல்​வி​யாண்​டில் (2026-27) முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் வரும் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணையதள விண்​ணப்​பப் பதிவு தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து விருப்​ப​முள்ள பட்​ட​தா​ரி​கள் https://exams.nta.ac.in/CUET-PG/ வழி​யாக ஜன.14 வரை விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய ஜன. 18 முதல் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​படும்.

SCROLL FOR NEXT