கல்வி

கல்வியியல் கல்லூரிகள் அங்கீகாரம் புதுப்பிக்க அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொ) கே. ராஜசேகரன், கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​தில் இணைப்பு அங்​கீ​காரம் பெற்​றுள்ள கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட், எம்​எட் கூடு​தல் இடங்​களுக்கு 2027-2028-ம் கல்வி ஆண்​டுக்கு புதிய மற்​றும் தொடர் இணைப்பு அங்​கீ​காரம் பெற விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

இதற்​கான விண்​ணப் படிவத்தை இணை​யதளம் வழி​யாக உரிய கட்​ட​ணம் செலுத்தி அக். 31-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். தவறி​னால் அபராத கட்​ட​ணம் செலுத்தி டிச. 10 வரை விண்​ணப்​பிக்​கலாம்.

SCROLL FOR NEXT