கல்வி

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க பிப்.28-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் கீழ், 2026-27-ம் கல்​வி​யாண்​டில் புதிய தொழிற்​பள்​ளி​கள் தொடங்​குதல், அங்​கீ​காரம் புதுப்​பித்​தல், புதிய தொழிற்​பிரிவு​கள் மற்​றும் தொழிற்​பிரிவு​களில் கூடு​தல் அலகு​கள் தொடங்​குதல் ஆகிய​வற்​றுக்​கான விண்​ணப்​பங்​கள் www.skilltraining.tn.gov.in என்ற இணை​யதளம் மூலம் பெறப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, நடப்பு கல்​வி​யாண்​டில் அங்​கீ​காரம் பெற விரும்​பும் ஒரு தொழிற்​பள்​ளி, ஒரே ஒரு விண்​ணப்​பத்தை சமர்ப்​பித்​தாலே போது​மானது. அதில் தேவை​யான அனைத்து தொழிற்​பிரிவு​கள் மற்​றும் கூடு​தல் அலகு​கள் குறித்த விவரங்​களை முழு​மை​யாக குறிப்​பிட வேண்​டும்.

          

விண்​ணப்​பக் கட்​ட​ண​மாக ரூ.5 ஆயிர​மும், ஆய்​வுக் கட்​ட​ண​மாக ரூ.8 ஆயிர​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை இணை​யம் வாயி​லாக வரும் பிப். 28-க்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

இது தொடர்​பான கூடு​தல் தகவல்​கள் மற்​றும் வழி​காட்​டு​தல்​களை www.skilltraining.tn.gov.in இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். மேலும் சந்​தேகங்​களுக்கு 044-25201163 என்ற தொலைபேசி எண்​ணிலோ ricentrenorthchennai@gmail.com என்ற மின்​னஞ்​சல் முகவரி​யிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று சென்னை ஆட்​சி​யர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT