கல்வி

கோவை பாரதியார் பல்கலை. தொலைதூர, இணையவழி கல்வி முதுநிலை படிப்புகளுக்கு தாமதமாகும் பருவத் தேர்வுகள்

உரிய காலத்தில் நிறைவுசெய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்பு

இரா.கார்த்திகேயன்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணையவழி மற்றும் தொலைதூர கல்வி​யில் முது​நிலை பாடப்​பிரி​வு​களில் பயிலும் மாண​வர்​களுக்​கு, உரிய காலத்​தில் தேர்வை நடத்​தாத​தால் படிப்​பு​களை உரிய காலக்​கெடு​வுக்​குள் முடிக்க முடி​யாமல் மாண​வர்​கள் பாதிக்​கப்​படும் நிலை உள்​ளது.

கோவை பார​தி​யார் பல்​கலைக்​கழ​கத்​தில் தொலை​தூரம், இணை​ய​வழி மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​கள் என தமி​ழ​கம் முழு​வதும் 14 ஆயிரம் பேர் படித்து வரு​கின்​ற​னர். இதில் முது​நிலை பாடத்​தில் சேர்ந்த பலருக்​கும் உரிய காலத்​துக்​குள் தேர்​வு​களை நடத்​தாத​தால் மாணவ, மாணவி​கள் சிரமத்​துக்​குள்​ளாகி வரு​கின்​ற​னர்.

இது தொடர்​பாக அவர்​கள் கூறும்​போது, “கடந்த 2024 ஜூலை, அக்​டோபர் மாதங்​களில் முது​நிலை படிப்​பில், தொலைநிலைக் கல்​வி​யில் சேர்ந்​தோம். அதன் பின்​னர் முதல் பரு​வத்​தேர்வே 14 மாதங்​கள் கழித்து 2025 டிசம்​பர் மாதம்​தான் நடந்​தது. கடந்த ஜூலை​யில் 2-வது பரு​வத்​தேர்வு நடந்​தது.

பரு​வத்​தேர்வு அறி​விப்​பில் குழப்​பங்​களும் இருந்​தன. தற்​போது வரும் செப்​டம்​பர் 5-ம் தேதி 3-ம் பரு​வத்​தேர்வு நடத்​து​வ​தாக அறி​வித்​துள்​ளனர். கடந்த காலங்​களில் இது போன்று அறிவிக்​கப்​பட்​டு, தேர்​வு​களை ஒத்தி வைத்த நிகழ்​வு​கள் நடந்​துள்​ளன. தற்​போதைய அறி​விப்​பின்​படி உடனடி​யாக தேர்​வு​களை முடிக்க வேண்​டும்.

ஜூலை 2024-ல் தொடங்​கி​னால் ஜூலை 2026-ல் முடிக்க வேண்​டும். 2 ஆண்டு முது​நிலை படிப்பை இரண்​டரை ஆண்​டு​கள் வரை படிக்​கும் நிலை உள்​ளது. அதே​போல் இணை​ய​வழி வகுப்​பு​களும் வரு​கைப் பதிவை மட்​டும் உறுதி செய்​யும் வகை​யில் உள்​ளன. இதனால் மாணவ, மாணவி​கள் பாதிக்​கப்​படு​கின்​ற​னர்.

எங்​கள் பிரச்​சினை​களை இணை​யத்​தில் புகார் அளித்​தா​லும், ஆக்​கப்​பூர்வ பதில் இல்​லை. அதே​போல் பல்​கலைக்​கழ​கத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதள​மும் உரிய முறை​யில் வேலை செய்​வ​தில்​லை. இதனால் படிப்​பவர்​கள் என்ன செய்​வதென்றே தெரிய​வில்​லை. மேலும் எங்​கள் வீட்​டில் யாரேனும் அடுத்​த​தாக வேலைக்கு சென்​று​கொண்டே படிக்க நினைத்​தால் கூட இந்த பல்​கலைக்​கழ​கத்​தில் தொலை​தூர மற்​றும் இணைய வழி கல்வி வேண்​டாம் என்று சொல்​லும் அளவுக்கு தான் கல்​வித்​தரம் இருக்​கிறது” என்​ற​னர்.

பார​தி​யார் பல்​கலைக் கழகத்​தின் தொலை​தூர கல்வி இயக்​குநர் ப.செல்​லச்​சாமி கூறிய​தாவது: 14 முது​நிலை படிப்​பு​கள் உள்​ளன. தற்​போது முது​நிலை மாண​வர்​களுக்கு தேர்​வுத் தேதி​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அந்த தேதி​யில் நிச்​ச​யம் தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

கடந்த கால குளறு​படிகள் சரி செய்​யப்​பட்​டுள்​ளன. 2026-ம் ஆண்​டுக்​குள் முது​நிலை​யில் தாமதம் ஏற்​பட்ட படிப்​புக்​கான தேர்​வு​கள் முடிக்​கப்​பட்​டு​விடும். இணை​ய​வழி வகுப்​பு​களை அவ்​வப்​போது ஆய்வு செய்​கிறேன். தொடர்ந்து அந்த வகுப்​பு​களையும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT