கல்வி

10-ம் வகுப்பு மாணவர்கள் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மாவட்ட முதன்மைக் கல்வி அலு​வலர்களுக்கு தேர்​வுத் துறை இயக்குநரகம் அனுப்​பியுள்ள சுற்​றறிக்கை விவரம்:

நடப்புக் கல்வி ஆண்​டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் தயாரிக்​கப்பட உள்​ளது. எமிஸ் தளத்​தில் மாணவர்​களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்​படம், கைபேசி எண், முகவரி உள்​ளிட்ட விவரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை சரி​பார்த்​து திருத்​தம் இருந்​தால் மேற்​கொள்​ள​ உத்​தர​விடப்​பட்​டது.

மாணவர் விவரங்​களைச் சரி​பார்த்​து, தேர்​வுத் துறை இணையதளத்​தில் அக்​.7-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய ​அறிவுறுத்தப்பட்​டது.

மாணவர்​கள் நலன் கருதி இதற்​கான அவகாசம் அக்​.12-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. இந்த வாய்ப்பை பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும். இந்த பெயர்ப் பட்​டியலின் அடிப்​படை​யிலேயே மதிப்​பெண் சான்​றிதழ் அச்​சிடப்​படும் என்​ப​தால் பணி​களை கவன​மாக மேற்​கொள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT