கல்வி

2022-2024-ம் ஆண்டு பிஎட் முடித்தோருக்கு ஏப்.1, 2-ல் சான்றிதழ்

செய்திப்பிரிவு

சென்னை: பிஎட் முடித்​தோருக்​கான பட்​டச்​சான்​றிதழ் ஏப்​ரல் 1 மற்​றும் 2-ம் தேதி விநி​யோகிக்​கப்​படும் என ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.

கல்​வி​யியல் கல்​லூரி​களில் கடந்த 2022-2024-ம் ஆண்டு பிஎட் படித்து முடித்த மாணவர்​களுக்​கான பட்​டச்​சான்​றிதழ் மார்ச் 26 மற்​றும் 27-ம் தேதி மாவட்ட வாரி​யாக கல்​வி​யியல் கல்​லூரி​களுக்கு விநி​யோகிக்​கப்​படும் என தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் அறி​வித்​திருந்​தது. பின்​னர் நிர்​வாக காரணங்​களால் சான்​றிதழ் விநி​யோகம் தள்​ளிவைக்​கப்​பட்​டது.

          

இந்​நிலை​யில், பிஎட் பட்​டச்​சான்​றிதழ்​கள் ஏப்​ரல் 1 மற்​றும் 2-ம் தேதி கல்​வி​யியல் கல்​லூரி​களிடம் வழங்​கப்​படும். கல்​வி​யியல் கல்​லூரி நிர்​வாகத்​தினர் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நாளில் தகு​தி​யான பிர​தி​நி​தியை பல்​கலைக்​கழகத்​துக்கு அனுப்பி பெற்​றுக்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

ஒரு​வேளை குறிப்​பிட்ட நாளில் வர இயலா​விட்​டால் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்​றிதழ்​களை பெற்​றுக்​கொள்​ளலாம் என ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் (பொறுப்​பு) பி.கணேசன் அனைத்து கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்​கும் (தன்​னாட்சி கல்​லூரி​கள் தவிர) தகவல் அனுப்​பியுள்ளார்.

SCROLL FOR NEXT