கல்வி

பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை: சிபிஎஸ்இ புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளி​களில் மாணவி​களுக் கான மாத​வி​டாய் சுகா​தார மேலாண்மை மேற்​கொள்​வதற்கான புதிய வழி​காட்​டு​தல்​களை, சிபிஎஸ்இ வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்​பில், அனைத்து வித​மான பள்​ளி​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றிக்கை விவரம்: பள்​ளி​களில் மாணவி​களுக்​கான மாத​வி​டாய் சுகா​தார மேலாண்​மையை உறுதி செய்​யும் வகை​யில் புதிய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

          

பயன்​படுத்​தப்​பட்ட நாப்​கின்​களை பாது​காப்​பான மற்​றும் சுகா​தா​ர​மான முறை​யில் அப்​புறப்​படுத்த கழிப்​பறை​களில் எரியூட்​டிகள் அல்​லது முறை​யான மூடி​யுடன் கூடிய குப்​பைத் தொட்​டிகள் அமைக்​கப்​பட்​டிருக்க வேண்​டும். இதை முறை​யாக கண்​காணிக்க வேண்​டும்.

இதுத​விர, மாத​வி​டாய் குறித்த விழிப்​புணர்வை மாணவர்​கள், ஆசிரியர்​கள், பெற்​றோர்​ மத்​தி​யில் ஏற்​படுத்​த​வும், இதுதொடர்​பான சமூக தயக்​கங்​கள் மற்​றும் மூடநம்​பிக்​கைகளைப் போக்​க​வும் பள்​ளி​கள் சிறப்பு விழிப்​புணர்வு மற்​றும் ஆலோ​சனை வகுப்​பு​களை தொடர்ந்து நடத்த வேண்​டும்.

இந்த நடவடிக்​கை​யானது மாணவி​களின் கண்​ணி​யம், உடல்​நலம் மற்​றும் நல்​வாழ்​வைப் பேணிக் காப்​ப​தோடு, அவர்​களின் பள்ளி இடைநிற்​றலை தடுத்து வரு​கைப் பதிவை அதி​கரிக்​க​வும் உதவும்.

இந்த வழி​காட்​டு​தல்​களை அனைத்து பள்​ளி​களும் உடனடி​யாக பின்​பற்​று​வதை உறு​தி​செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT