கல்வி

10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு பிப்.16-ம் தேதி தொடங்குகிறது

வேட்டையன்

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி முதல் தொடங்குகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு (2026-27) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 9-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 9-ம் தேதியும் நிறைவடைகிறது.

இதில் 10-ம் வகுப்பு தேர்வை 26.5 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வை 19.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 10-ம் வகுப்பில் 83 பாடங்களுக்கும், 12-ம் வகுப்பில் 121 பாடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

பல்வேறு பாட தேர்வுகளுக்கு இடையே போதுமான கால இடைவெளி உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT