சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பிஎட் மற்றும் எம்எட் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-ஐ பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் தனியே கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படாது. தேர்வு முடிவில் ஏதேனும் விளக்கம் கோர வேண்டுமானால் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் (திங்கள்) ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.