கோப்புப் படம்
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 13 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
இளங்கலை 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும், அதேபோல், முதுகலை 2-ம் ஆண்டுமாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின. இதற்கிடையே, இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து முதல் ஆண்டுமாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.