கல்வி

நாகை மீன்வள பல்கலை.யில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: ​நாகை தமிழ்​நாடு டாக்​டர் ஜெ.ஜெயலலிதா மீன்​வளப் பல்​கலைக்​கழகத்​தில் 2026-27 இளநிலைப் பட்​டப்​படிப்பு சேர்க்​கைக்கு மே15 முதல் இணை​ய வழி​யில் விண்​ணப்​பிக்கலாம் என துணைவேந்​தர் பெலிக்ஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு டாக்​டர் ஜெ.ஜெயலலிதா மீன்​வளப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் 10 உறுப்பு கல்​லூரி​கள் மற்​றும் ஒரு இணைப்பு தனி​யார் கல்​லூரி மூலம் 8 இளநிலைப் படிப்​பு​கள், 5 தொழில்​முறை மற்​றும் 3 துணைத் தொழில்​முறை படிப்​பு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

மேலும், இந்த கல்​வி​யாண்​டில் உறுப்பு கல்​லூரி​களில் 416 மாணவர்​களும், இணைப்பு தனி​யார் கல்​லூரி​யில் 60 மாணவர்​களும் சேர்க்​கப்பட உள்​ளனர். மீனவர் சமூக ஒதுக்​கீட்​டின் கீழ் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களில் 5 சதவீதம் சேர்க்கை பெறும் மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை மீனவர் நல வாரி​யம் ஏற்​கும். www.admission.tnfu.ac.in என்ற இணை​யதளத்​தில் மே 15 முதல் ஜூன் 14-ம் தேதி மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

விண்​ணப்​பக் கட்​ட​ணம் எஸ்​சி,எஸ்​சிஏ, எஸ்​.டி மாணவர்​களுக்கு ரூ.250, பிற பிரி​வினருக்கு ரூ.500. மேல்​நிலைத் தேர்வில் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்​களின் அடிப்​படை​யில் தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்படும். கலந்​தாய்வு இணை​ய​ வழி​யில் நடை​பெறும். சிறப்பு பிரி​வினர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நடை​பெறும்.அதன் தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

SCROLL FOR NEXT