கல்வி

கல்கி நினைவு அறக்​கட்​டளை கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: கல்கி கிருஷ்ண​மூர்த்தி நினைவு அறக்​கட்​டளை, ஆண்​டு​தோறும் தகு​தி​வாய்ந்த மாணவர்​களுக்கு கல்வி உதவித்​தொகை வழங்கி வரு​கிறது. பள்ளி முதல் கல்​லூரி வரை படிக்​கும் மாணவர்​கள், நிபந்​தனை​களுக்​குட்​பட்டு இந்த உதவித் தொகைக்கு விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தில் ரூ. 18 லட்​சம் பெறு​மான​முள்ள உதவித் தொகைகள் பகிர்ந்​தளிக்​கப்​படும்.

2026–2027 கல்வி ஆண்​டில் அரசு அங்​கீ​காரம் பெற்ற கல்வி நிறு​வனத்​தில் சேர்ந்​ததற்​கான சான்​றிதழ் கொண்​டுவர வேண்​டும். பிளஸ் ஒன், பிளஸ் டூ, பாலிடெக்​னிக், பட்​டப்​படிப்​பு, பட்ட மேற்​படிப்பு ஆகிய வகுப்​பு​களில் ஏதேனும் ஒன்​றில் பயில்​பவ​ராக இருக்க வேண்​டும். ஆராய்ச்சி மாணவர்​களும் விண்​ணப்​பிக்​கலாம். கடைசி​யாக எழு​திய பரீட்​சை​யில் குறைந்​த​பட்​சம் 80% மதிப்​பெண் பெற்​றிருக்க வேண்​டும்.

ஆண்​டுக்கு ஒரு லட்​சத்து 50 ஆயிரம் ரூபாய்க்​கும் குறை​வான வரு​மானம் உடைய குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​கள் மட்​டுமே விண்​ணப்​பிக்​கலாம். கடைசி தேதி ஜூலை 31. இது தொடர்​பான மற்ற விவரங்​களை https://kalkionline.com/ என்​ற இணை​யதளத்​துக்​குச்​ சென்​று தெரிந்​து கொள்​ளலாம்​.

SCROLL FOR NEXT