கல்வி

பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்​கள் உள்​ளன. இதில், பொறி​யியல் டிப்​ளமா முடித்து குறைந்​த​பட்​சம் ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து வருபவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 15-ல் தொடங்கியது. கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்​தில் அறியலாம்.

SCROLL FOR NEXT