கோப்புப் படம் 

 
கல்வி

ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: மே 17-ம் தேதி நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை (ஏப்.23) தொடங்குகிறது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது.

2026-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நாளை (ஏப்.23) தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in இணையதளம் வாயிலாக மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் இத்தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. காலை, மதியம் என 2 தாள்களாக தேர்வு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT