சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய உதவித் தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதன்படி ப்ரீ மெட்ரிக் உதவித் தொகைக்கு ஆகஸ்ட் 31-க்குள்ளும், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கு அக். 31-க்குள்ளும் https://scholarships.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது ஆதார், வருமானச் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.