சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்க கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ )நடத்தி வருகிறது.
அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2026- 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
நீட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வுகள் முகமை வழங்காததால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப் புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை “www.tnmedicalselection.org” என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.