கல்வி

எஸ்எஸ்எல்சி துணை தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கல்) ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போது தேர்வர்களின் நலனைக் கருதி இந்த கால அவகாசம் ஜூன் 11 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT