கல்வி

‘இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்த தருணம்...’ - அமிர்தவர்ஷினி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

Sponsored Content
நான் முதல்வன் திட்டம்
வணக்கம். என் பெயர் அமிர்தவர்ஷினி. நான் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள SASTRA Institute of Technology கல்லூரியில் Computer Science Engineering இறுதி ஆண்டு பயின்று வருகிறேன்.

கடந்த நவம்பர் 2025ல், “நான் முதல்வன்” வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணல் மற்றும் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த வேலை வாய்ப்பு முகாம் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே நடத்தப்பட்டது என்பது தான். அந்த முகாமில் நடந்த முதல் இரண்டு தேர்வுகளையும் வெற்றிகரமாகத் தாண்டி, தற்போது நான் Infosys நிறுவனத்தில் System Engineer என்ற பதவியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த வேலைக்கு ஆண்டிற்கு ரூ.3.6 LPA சம்பளம் வழங்கப்படுகிறது.

இதெல்லாம் எனக்கு அளவிட முடியாத சந்தோஷத்தை கொடுக்கிறது நான் இறுதி ஆண்டு மாணவி என்பதால் “கல்லூரி முடித்ததும் என்ன செய்யப் போகிறேன்?” “வேலை எப்படி தேடுவேன்?” “என்னோட எதிர்காலம் என்ன?” என நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இருந்தது. ஆனால் “நான் முதல்வன்” திட்டம், அந்த எல்லா பயங்களையும் ஒரேடியாக தகர்த்தெறிந்து, எனக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல வேலையையே அமைத்து கொடுத்தது.

சமீபத்தில் நடந்த “நான் முதல்வன்” நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் கையால், Infosys நிறுவனத்தின் பணி ஆணையை பெற்றுக் கொண்ட தருணம், என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு நிமிடம். “நான் முதல்வன்” திட்டம் இலவச course மட்டும் கொடுக்கவில்லை... வேலை வாய்ப்பையும் நேரடியாக பெற்று கொடுக்கிறது.

என்னைப் போல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல செய்தியை கேட்டதும் எங்க வீட்டில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பா, அம்மா இருவருக்கும் இருந்த கவலைகள் முழுவதுமாக தீர்ந்தது. Infosys மாதிரி இந்தியாவில் பல லட்ச இளைஞர்களின் கனவான ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்வது என்னோட கனவும் ஆசையும் தான். அந்த கனவு “நான் முதல்வன்” திட்டம் மூலமாக இன்று நிஜமாகி இருக்கு.

இதன் மூலம் என் வாழ்க்கையை மட்டுமல்லாமல், என் குடும்பத்தின் வாழ்க்கையையும் “நான் முதல்வன்” மாற்றி அமைத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

வெற்றி நிச்சயம் திட்டம்
வணக்கம். என் பெயர் அகிலாண்டம். நான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். என் அப்பா கூலி வேலை செய்கிறார்.

எனக்கு அம்மா கிடையாது. ஒரு தம்பி மட்டுமே. நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன். 12-வது முடித்ததும் என்னை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத அளவுக்கு எங்க குடும்பம் ரொம்ப கஷ்டமான நிலையில் இருந்தது.

படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சூழ்நிலை அதுக்கு இடம் கொடுக்கவில்லை. அப்பொழுதுதான் குழந்தைகள் நலத்துறை மையம் மூலமாக “வெற்றி நிச்சயம்” திட்டம் பற்றி தெரியவந்தது. “இலவசமா கோர்ஸ் இருக்கு, படிச்சா வேலையும் கிடைக்கும்”ன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போய் சேர்த்தாங்க. அந்த திட்டம் மூலமாக நான் Bachelor in Automotive Manufacturing Technology என்னும் course-ல் சேர்ந்தேன்.

இப்பொழுது நான் படித்துக் கொண்டே ZF Commercial Vehicles என்ற நிறுவனத்தில் trainee ஆகவும் வேலை செய்கிறேன். இந்த course படிக்கும்போதே மாதம் ரூ.17,000 stipend ஆக எனக்கு கிடைக்கிறது. அது என் படிப்பு செலவுக்கு மட்டும் இல்லை... அப்பாவுக்கு முடியாத நேரத்துல எங்க குடும்பத்துக்கே ஒரு பெரிய துணையா இருக்கு. அதுமட்டுமில்லாமல் என் தம்பியோட படிப்பு செலவுக்கும் இந்த stipend ரொம்ப உதவியா இருக்கு. இந்த course முடிச்ச பிறகு “வெற்றி நிச்சயம்” திட்டம் மூலமாகவே அதே ZF Commercial Vehicles நிறுவனத்தில் வேலையும் வாங்கி கொடுக்குறாங்க.

SCROLL FOR NEXT