இன்பா
வணக்கம், என்னுடைய பெயர் இன்பா. என்னுடைய ஊர் செங்கோட்டை, தென்காசி மாவட்டம். என்னுடைய அப்பா ஒரு கண்டக்டர். என்னுடைய அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. ஒரு சாதாரண, ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். இன்று நான் UPSC Civil Services Examination 2023-ல் Rank 851 பெற்று, IPS – 2024 Batch, கோயம்புத்தூரில் ASP Trainee ஆக பணியாற்றி வருகிறேன்.
இந்த வெற்றி என் தனிப்பட்ட முயற்சி மட்டும் அல்ல. முழுக்க முழுக்க எனக்கு ஒரு துணையாக, ஒரு நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆதரவாக இருந்தது “நான் முதல்வன்” திட்டம் தான். UPSC போன்ற மிகப்பெரிய போட்டித் தேர்வுக்கு தயாராவது, என்னைப் போல கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் கடினமானது.
சென்னை அல்லது டெல்லி போய் படிக்க பணம், வசதி, வழிகாட்டல் – எதுவுமே எளிதாக கிடைக்காது. பல நேரங்களில் “நம்மால் முடியுமா?” என்ற கேள்வி மனதுக்குள் வந்தது. அந்த நேரத்தில் தான் “நான் முதல்வன்” எனக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. இந்த திட்டத்தின் மூலம், All India Civil Services Coaching Centre, சென்னை-ல் 6 மாதங்கள் இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த பயிற்சியின் பலனாக நான் UPSC Prelims தேர்வை clear செய்தேன். Prelims clear செய்த பிறகு, Mains Examination preparation-க்காக ₹25,000 stipend-ம் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. அந்த தொகை என் preparation-க்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. புத்தகங்கள் வாங்கினேன், notes print எடுத்தேன், தேவையான study materials எல்லாம் பெற்றேன். மூன்று மாதங்கள் முழு கவனத்துடன் preparation செய்ய முடிந்தது.
பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்ல, அங்குள்ள அனைவரும் என்னை குடும்பத்தினரைப் போல பார்த்துக் கொண்டார்கள். மனம் உடைந்து நின்ற நேரங்களிலும் என்னை மீண்டும் எழுப்பி, நம்பிக்கை கொடுத்தார்கள். இதோடு மட்டும் இல்லாமல், Entrance Exam clear செய்த மாணவர்களுக்கு monthly scholarship – ₹7,500 கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த ₹7,500 இருந்ததால தான் Mains வரை institute-ல இருந்து படிக்க முடிந்தது.
Mains முடிந்த பிறகு Interview preparation-க்காக வீட்டிற்கு போனபோது அங்கிருந்து படிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் scholarship exam வந்தது… நான் அதை clear செய்தேன். அந்த stipend இருந்ததால தான் திரும்ப சென்னை வந்து stay பண்ணி, mock interviews attend பண்ணி, full-time interview preparation செய்ய முடிந்தது. அதோட result தான்… இன்று நான் IPS – 2024 Batch-ல் join பண்ணி இருக்கேன்.
சிம்பிளா சொல்லணும்னா, ஒரு காலத்துல நான் beneficiary-ஆ உட்கார்ந்திருந்தேன். இன்னிக்கு அதே system-ல இருந்து front-row role-க்கு வந்திருக்கேன். என்னை மாதிரி பல கிராமப்புற மாணவர்கள் UPSC எழுதணும், IAS / IPS ஆகணும், நம்ம society-க்கு சேவை செய்யணும் அப்படின்னு நான் மனப்பூர்வமா ஆசைப்படுகிறேன்.
“ஏழை குடும்பத்திலிருந்து IAS / IPS வர முடியாது” அப்படின்னு சொல்றது உண்மை கிடையாது. நம்ம அரசாங்கம் கொடுக்குற வாய்ப்புகளை சரியா பயன்படுத்தினா நிச்சயம் முடியும். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் இந்த “நான் முதல்வன்” திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், இதற்காக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். “நான் முதல்வன்” – என் வாழ்க்கையை மாற்றிய திட்டம்.
மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/
வெற்றி நிச்சயம் திட்டம்: வணக்கம், என் பெயர் நவாஸ்கான். நான் மதுரை கோரிப்பாளையத்தில் வசித்து வருகிறேன். நான் B.Com பட்டதாரி. ஒரு காலத்தில், “படித்தாலும் வேலை கிடைக்குமா?” என்ற நம்பிக்கையே எனக்கில்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் “இவனால் முடியாது” “படிச்சு என்ன பண்ணப் றான்?” “வேலை கிடைக்காது” என்ற வார்த்தைகள்தான் எப்போதும் என்னைச் சுற்றி இருந்தது.
அந்த உற்சாகமற்ற வார்த்தைகள் என்னை பலமுறை உடைத்தது. நான் ஒரு மாற்றுத்திறனாளி. அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி அலுவலகத்தின் மூலம்‘வெற்றி நிச்சயம்’ பயிற்சி திட்டம் பற்றி தெரியவந்தது. உள்ளுக்குள் பயம் இருந்தாலும், “என்னாலும் முடியும்” என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு நான் அந்த பயிற்சியில் சேர்ந்தேன்.
நவாஸ்கான்
படிப்பு முடிந்த பிறகு வேலை தேடி பல இடங்களில் அலைந்தேன். வேலை கிடைக்காத நாட்களில், மனசுக்குள் ஒரு வெறுமை… ஒரு வேதனை… “என் வாழ்க்கை இப்படி தான் முடியுமா?” என்ற கேள்வி அடிக்கடி வந்தது. அந்த நேரத்தில்தான் " வெற்றி நிச்சயம்" பயிற்சி திட்டம் பற்றி அறிந்தேன்.
என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. இந்த திட்டத்தில் நான் கற்றுக்கொண்டது வெறும் வேலைக்கான பயிற்சி மட்டும் அல்ல. 👉 Packing 👉 Packing materials 👉 வேலை செய்யும் முறை 👉 ஒழுக்கம் 👉 தன்னம்பிக்கை இவையெல்லாம் என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் உணர்ந்த விஷயங்கள்.
இங்கே வந்த பிறகு தான் “என்னால் முடியும்” “என்னாலும் முன்னேற முடியும்”என்ற நம்பிக்கை உள்ளுக்குள் உருவானது. இது ஒரு பயிற்சி திட்டம் மட்டும் அல்ல. என்னைப் போல திசை தெரியாமல் இருந்த பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு வாய்ப்பு. என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு புதிய வழியை காட்டிய இந்த வெற்றி நிச்சயம் திட்டத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும், என் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் கிடைத்ததற்கு காரணமான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/