கடலூர்: பிளஸ் 2 தொழில் கல்வி பிரி வுக்கு தொழில்கல்வி பிரிவுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் பாடநூல் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 தொழில் கல்வி பிரிவுக்கு தொழில்கல்வி பிரிவுக்கு வேலை வாய்ப்புத் திறன்கள் பாடத்திற்கு உரிய நேரத்தில் புதிய பாடநூல் வெளியிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மேல்நிலை தொழிற்கல்வி மாணவர்கள் உள்ளனர் என்று கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி நமது, ‘இந்து தமிழ் திசை’யில் செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தி வெளியிட்ட நாளிதழை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு மாணவர்களின் பெற் றோர், மெயிலில் அனுப்பி வைத்து, தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தொழில்கல்வி பிரிவுக்கு வேலை வாய்ப்புத் திறன்கள் பாடநூல் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தப்புத்தகத்தில், தன்னைப் புரிந்து கொள்ளுதல், ஆங்கில மொழித் திறன்கள், தகவல் தொடர்புத் திறன்கள், மின்னணு திறன்கள், தொழில் முனைவு, திறன்களை வளர்த்தல், நிதி சார் கல்வியறிவு, வேலை சார்ந்த உலகிற்குத் தயாராகுதல் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
நிதி சார் கல்வியறிவு என்ற தலைப்பிலான பாடத்தில் பணத்தின்கால மதிப்பு, டிஜிட்டல் நிதியியல்,நிதி தொழில்நுட்பம், இந்தியாவில் வங்கியியல் அமைப்பு, வரிவிதிப்பு, ஜி. எஸ். டி ஆகியனகுறித்து விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது. வேலை சார்ந்த உலகிற்குத் தயாராகுதல் என்ற தலைப்பில் உலகளாவிய வேலைகலாச்சாரம், வேலை சந்தை ஆய்வு, பனித்திறன்கள், நிலையான தொழில், வாடிக்கையாளர் தொடர்பு, வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்குதல், இணைய தளங்கள் மூலம் வேலைகளுக்கு விண்ணப்பித்தல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இடம்பெற்றுள்ளது. இப்பாடங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.