கல்வி

பார்வையற்ற மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டெம் திட்டத்தின் கீழ் 50 பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஸ்டெம்' எனும் கற்பித்தல் திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ்மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் நிதியுதவியுடன் கூடிய ரோபோட்டிக் வடிவமைப்பு பயிற்சி கடந்த மே 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்த பயிற்சியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு ரோபோட்டிக் வடிவமைப்புக்கான செயல் திட்டங்கள் கற்று தரப்பட்டன. இதன்மூலம் மொத்தம் 50 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ இந்த பயிற்சியின் மூலம்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளால் ஸ்டெம் திட்டத்தின் மூலம்கற்க முடியாது என்ற எண்ணம் தகர்க்கப்பட்டுள்ளது.

மேலும்,மாற்றுத் திறனாளிகளாலும் ரோபோக்கள், செயற்கைக்கோள்களை வடிவமைக்க முடியும் என்பதுநிரூபணமாகியுள்ளது. இதேபோல், தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன’’ என்றனர்.

SCROLL FOR NEXT