கல்வி

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

26-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 7 ஆயிரத்து 649 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 708 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 894 பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாள். எனவே, மாணவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கலந்தாய்வை நடத்த உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT