சென்னை: சென்னை ஐஐடியும் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து டேட்டா சயின்ஸ் மற்றும்செயற்கை நுண்ணறிவு பாடத்தில் கூட்டு முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன.
இதுகுறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, ``இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், பாதி காலம் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்திலும், பாதி காலம் சென்னை ஐஐடியிலும் படிக்கலாம்'' என்றார்.
ஐஐடி டீன் (சர்வதேச பணி) ரகுநாதன் ரங்கசாமி கூறும்போது, "இப்படிப்பில் சேரும் மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ளஅண்மைக்கால முன்னேற்றங்களை அறிந்து கொள்ளலாம்" என்றார்.
ஐஐடி ஆலோசகர் (சர்வதேசகல்வி திட்டம்) கூறும்போது, "அறிவியல் அல்லது பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த முதுநிலை படிப்பில்சேரலாம். உலக அளவில் கல்விமற்றும் ஆராய்ச்சியில் சிறந்துவிளங்கும் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கும் அங்குள்ள அதிநவீன ஆய்வுக்கூடங்களை பயன்படுத்தி ஆராய்ச்சி பணியில் ஈடுபடவும் இந்த படிப்பு அருமையான வாய்ப்பு" என்றார்.