சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்து 32,872 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 18) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். சேர்க்கை தொடர்பாக சந்தேகம் இருப்பின் பள்ளிக் கல்வியின்உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.