கல்வி

காந்தி கிராம பல்கலை.யில் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 2023-24 கல்வியாண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கியூட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நடைபெறும்.

அதேநேரம், பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.ruraluniv.ac.in என்ற இணையளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT