கல்வி

எண்ணும் எழுத்தும் திட்டம்: 4, 5-ம் வகுப்பு பாடங்கள் தயார்

செய்திப்பிரிவு

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு 4, 5-ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், அவற்றுக்கான பாடங்கள் தயாராக உள்ளன.

இது தொடர்பாக மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனஇயக்குநர் ந.லதா ஆகியோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறை அரசாணையின்படி, எண்ணும் எழுத்தும் திட்டம் 2023-2024-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 4மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான முதல் பருவ பாடப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 4, 5-ம்வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வரும் 25 முதல்27-ம் தேதி வரையும், ஒன்றிய அளவிலான பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஜுன் 1 முதல் 3-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இந்தப் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு பணிவிடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT