கல்வி

மே 7-ம் தேதி நடக்க இருந்த பருவ இறுதித் தேர்வு 12-ம் தேதி நடைபெறும்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 7-ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பருவ இறுதித் தேர்வு இம்மாதம் 12-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் மே 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இறுதி பருவத் தேர்வுகள், அரசுத் தேர்வுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. தற்போது அத்தேர்வுகள் வருகிற 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அதே தேர்வு மையத்தில் நடைபெறும். இத்தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT