கல்வி

பள்ளிக்கல்வி துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்: சென்னையில் இன்று தொடங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச்29, 30) நடைபெற உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவாதித்துஅடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன அதன்படி, அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நடத்தப்பட உள்ளது.

அமைச்சர் பங்கேற்கிறார்: இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தக்குமார், துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மைமற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பொதுத் தேர்வு நிலவரம்: இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிலவரம், இடைநின்ற மாணவர்கள் விவகாரம், நிதிசெலவினங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை மீட்டு சிறப்பு துணைத் தேர்வெழுத வைப்பதற்கான பணிகள் குறித்து பேசப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT