கல்வி

பிளஸ் 2 பொதுத்தேர்வு | இயற்பியல் எளிதாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கியபாடமான இயற்பியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை தமிழ்,ஆங்கில பாடத்தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.

முக்கிய பாடமான இயற்பியல்தேர்வு வினாத்தாள் எளிமையாகஇருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில்சில கேள்விகள் தவிர்த்து மற்றஅனைத்தும் எதிர்பார்த்தவைகளாக கேட்கப்பட்டிருந்தன.

இதனால் இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT