கல்வி

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்துவிட்டதாக வதந்தி

செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் 5-ம் தேதியுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது. இதில் நேற்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆங்கில வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவின. இதையடுத்து சிபிஎஸ்இ நிர்வாகம், ‘இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,வாரியத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம்' என்றும் மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸாரிடம் சிபிஎஸ்இ புகார் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT