சென்னை: கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக சென்னை ஐஐடி -இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல் கலைக்கழகத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர்,சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் முன்னிலையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழக முதல்வர் ராஜூபாலாஜியும் சென்னை ஐஐடி முதல்வர் முரளியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதில் இந்திய கடல்சார் கொள்கை, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைப்பு,ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இணைந்து செயல்படுவது, குறுகிய, நீண்டகால படிப்புகளை அறிமுகம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.