சென்னை: பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாடு, தலைமை பண்பு, மேலாண்மை ஆகிய கருத்துருகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 4 கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கான 5-ம் கட்ட பயிற்சி முகாம் நாளை(பிப்.27) தொடங்கி ஏப்.1 வரைமதுரையில் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.