கல்வி

கரூர் | அரசுப் பள்ளியில் ரூ.3 லட்சத்தில் கழிப்பிடத்தை புதுப்பித்த முன்னாள் மாணவர்கள்

செய்திப்பிரிவு

கரூர்: அரசுப் பள்ளியில் சேதமடைந்து கிடந்த கழிப்பிடத்தை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ரூ.3 லட்சத்தில் புதுப்பித்து அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலையில் (ஆர்டிமலை) உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிடம் சேதமடைந்து, யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

இது குறித்து அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ரூ.3 லட்சம் நிதி திரட்டி, அந்தத் தொகையில் கழிப்பிடத்தைப் புதுப்பித்ததுடன், கழிப்பிட வளாகத்துக்குச் செல்ல சிமென்ட் நடைபாதையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட கழிப்பிடத்தை பள்ளி நிர்வாகத்திடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னாள் மாணவர் இளங்கோவன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னம்மாள், முன்னாள் மாணவர்கள் இளங்கோ, பாலமூர்த்தி, சின்னையன், சுப்பிரமணியன், அழகர், ஜோதிலட்சுமி, கருப்பையா, வீரன், பாலமுருகன், சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி சார்பில் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT